In this video, you will learn about the different uses of shall, should, must, have to and ought to.
To watch Modal Auxiliaries Part 1, please click here:
#TheRiseSummit #TheRise #EnglishWithVennila
To Register ==== usa.tamilrise.org ====
The RISE USA Chapter brings you the opportunity to learn more about the like-minded entrepreneurs, and get connected across the globe. You may find the mentors, business partners, or even the funding support that you need to take your business to the next level.
கடல் வழி வணிகமே உலகமயப் பொருளாதார உருவாக்கத்தின் முதற் கட்டமும், வரலாற்று அடித்தளமும். பண்டைய இந்தியாவில் ஏழு துறைமுகங்கள் உலக அளவில் புகழ் பெற்றுத் திகழ்ந்தன. லொத்தால், பரூச் ஆகிய இரு துறைமுகங்கள் அன்று தமிழன் வாழ்ந்து செழித்த சிந்து சமவெளி நாகரீக நிலக் களத்தில் வருபவை. முசிறி ,கோழிக்கோடு இரண்டும் தமிழின் சேரநாட்டு நிலப்பரப்பில் அமைந்தவை . பூம்புகார், அரிக்கமேடு, தூத்துக்குடி மூன்றும் சோழ-பாண்டிய நாட்டு கடல் வெளிகளில் அமைந்தவை. இந்தியத் துணைக்கண்டத்தின் பண்டைய ஏழு துறைமுகங்களும் தமிழர்களால் உருவாக்கப்பட்டவை. உலக வணிகத்தில் முடிசூடா மன்னர்களாக தமிழர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்திலன் வரலாற்றுச் சான்றுகள். அதுபோலவே வடகிழக்கு இலங்கை தமிழர் தாயக நிலப்பரப்பில் நெடுந்தீவு, காங்கேசன்துறை, மன்னார்-மாந்தை திருக்கோணமலைத் துறைமுகங்கள் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய இரு பெரும் கடல் வெளி நாடுகளில் வணிகத்தை இலங்கையோடு இணைத்தன .
கடல்வழி வணிகத்தைக் கட்டமைத்து உலக பொருளாதாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த தமிழன் 19 - 20 நூற்றாண்டு உலகமயப் பொருளாதாரத்தில் தன் இடமிருந்து கூலிகளாகவும் , சிறு வணிகர்களாகவும், சம்பளத்திற்குக் கடமையாற்றும் திறனாரகளாகவும் சுருங்கியமை தமிழ் இனத்திற்கு நேர்ந்த வரலாற்று பின்னடைவு. 21 - ம் நூற்றாண்டில் உலக வெளியில் தமிழன் மீண்டும் தலை நிமிரத் துடிக்கும் சங்க நாதமே.The Rise - எழுமின் வட அமெரிக்க மாநாடு அக்டோபர் 24, 25 நாட்களில் நடைபெறுகிறது. இணைந்து வளர்த்திட விரும்புவோர் இன்றே பதிவு செய்யுங்கள் usa.tamilrise.org. பதிவு கட்டணம் இல்லை.
0 Comments